1

கூகிள் வாய்ஸ் (Google Voice).



மிகவும் உபயோகமான பல்வேறு சேவைகளை இணையத்தில் வழங்கி வரும் கூகுளின் மற்றுமொரு சேவைதான் கூகிள் வாய்ஸ் (Google Voice).அது குறித்து ஓரளவுக்கு அறிமுகம் கொடுக்கும் வண்ணமே இந்த இடுகை. உங்களிடம் உள்ள தொலைபேசிகளை ஒருங்கிணைத்து பல சிறந்த வசதிகளை இந்த சேவை வழங்குகிறது.



ஒப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது ஜிமெயில் போன்றதொரு சேவைதான். மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியை குரல் வழி அனுப்ப முடியும். உங்களிடம் உள்ள பல தொலை பேசிகளுக்கு ஒரே எண்ணை கூகிள் வாய்ஸ் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த சேவையில் உண்டு.

செய்திகளை உங்கள் குரல்வழி பதிவு செய்து மெயிலாக அனுப்பலாம். அனுப்பபடுகிற வாய்ஸ் மெயில்களை கேட்கலாம். தரவிறக்கலாம். வாய்ஸ் மெயில்கள் எழுத்துகளாக transcript செய்யப்பட்டு அவற்றை மெயில் போன்று வாசித்து கொள்ளவும் முடியும். இவை உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ்சாக வந்து சேரும்படியும் அமைத்து கொள்ளலாம்.




இதனை உபயோகிக்கும் போது உங்களுக்கென்று தனியே போன் நம்பர் போன்று கூகிள் வாய்ஸ் எண் பெற்று கொள்ள முடியும். இதனை உங்கள் தொலைபேசி, மொபைல் போன்களுடன் தொடர்பு படுத்தி கொள்ள முடியும்.உதாரணத்திற்கு உங்களை தொடர்பு கொள்வதற்கு வீட்டு தொலைபேசி, அலுவலக தொலைபேசி, மொபைல் என்று மூன்று எண்கள் இருப்பதாக கொள்வோம். இந்த மூன்று எண்ணையும் உங்கள் கூகிள் எண்ணுடன் தொடர்புபடுத்தி கொள்ள முடியும்.


உங்களை அழைப்பவர் உங்கள் கூகிள் எண்ணுக்கு அழைக்கும் போது உங்களுக்கு உள்ள மூன்று போன்களிலும் ரிங் அடிக்கும். அல்லது உங்கள் கூகிள் எண்ணில் தொடர்பு கொண்டால் காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணிவரை உங்கள் அலுவலக போனில் அழைப்பு (Ring) வரும்படியும், மற்ற நேரங்கள் உங்கள் வீட்டு போனில் தொடர்பு (Ring) கொள்ளும்படியும் உங்கள் கூகிள் எண்ணில் செட்டப் செய்து கொள்ளலாம்.

உங்கள் நண்பர்கள் அழைக்கும் போது மட்டும் மொபைல் எண்ணில் அழைப்பு வரும்படி அமைத்து கொள்ளலாம். வேண்டாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை நிரந்தரமாக தடை செய்துகொள்ளும் வசதியும் உண்டு. உங்கள் மூன்று போன்களில் எந்த போன் வழியாகவும் கூகிள் வாய்ஸ் மூலம் மற்றவர்களை அழைத்து கொள்ள முடியும்.

நாம் எப்போதும் ஒரே தொலைபேசி எண்ணை வைத்திருப்போம் என்று உறுதியாக கூற முடியாது. தொலைபேசி நிறுவனங்கள் சலுகையுடன் சிறப்பான சேவை வழங்கும் போது அடிக்கடி எண்ணை மாற்றி மற்றொரு சேவைக்கு மாறி கொண்டிருப்போம். இதனால் நமக்கு நிரந்தர தொடர்பு எண் என்பது இயலாத விஷயம். இதற்கும் ஒரு தீர்வு கூகிள் வாய்ஸ் எண்.

0 comments:

""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா

MEMBERS

Kokilam Teacher Farewell Day, Kavalkinaru

http://www.youtube.com/watch?v=LH80Q35Ykrw&feature=colike

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP