1

தமிழீழம் வரலாறு-7


தமிழீழ தேசியத்தவைர் மேதகு வே பிரபாகரன்-7

 திம்புப் பேச்சுவார்த்தை
 

ராஜிவ் காந்தியின் தலைமையில் இந்திய அரசு இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை தன் விருப்பத்திற்கு ஏற்ப கையாளத் தொடங்கிஇ
ஈடுபட்டுவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் போட்டுஇ 1985இன் ஆரம்பத்திலிருந்தே தலைவர் பிரபாகரனின் தலைமையில் கெரில்லா நடவடிக்கைகளில் 1985 ஆனி 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டின் ஆடிமாத முற்பகுதியில் இந்திய அரசின் மத்தியத்துவத்தின் கீழ் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

சகல தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன. தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து

தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மற்றைய தமிழ் குழுக்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இக் கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது. இப்படியாகச் சிக்கலடைந்த திம்புப் பேச்சு வார்த்தைகள்இ போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலையில் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முறிவடைந்தன. இந்நேரத்தில் தமிழீழத்தில் தன் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை பற்றிய நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.



பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இதனால் தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் பாரிய முரண்பாடும் இடைவெளியும் ஏற்பட்டது. ஆனால் இந்தியா பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறியிருக்கிறார். ~~எமக்கு இந்தியாவின் உதவியும் நல்லெண்ணமும் அவசியம். அதே வேளையில் இந்தியா தனது தீர்வைத் தமிழீழ மக்கள் மீது திணிப்பதை நாம் விருப்பவில்லை. தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முழு உரிமையும் எமது மக்களுக்கு உண்டு~~ என்று.

ஆனால் இந்திய அரசும் அதன் பிரதமரும் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அப்போதைய தமிழக முதல்வருக்கு அழுத்தங்களைக் கொடுத்துஇ 1986ம் ஆண்டு ஐப்பசியில் தமிழக காவற்துறை மூலம் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த தகவல் தொடர்புச் சாதனங்களைப் பறித்தார்கள். தலைவர் பிரபாகரனையும் மற்றைய போராளிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று குற்றவாளிகளை நடத்துவது போன்று நடத்தினார்கள்.

சாகும்வரையிலான உண்ணாவிரதம்
இந்நிலையில் தலைவர் பிரபாகரன் என்ன செய்யப்போகிறார் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருந்தது.
ஆயுதப் போராட்ட இயக்கத்தின் தளபதிஇ சிங்களப்படைகளின் சிம்ம சொப்பனமான தலைவர் பிரபாகரன்இ அனைவரும் எதிர்பார்த்ததிற்கு மாறாக தமிழகக் காவற்துறையினர் தங்களிடம் இருந்து பறித்த தகவல் தொடர்புச் சாதனங்களைத் திரும்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீர்இ ஆகாரம் இன்றி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை 1986ம் ஆண்டு கார்த்திகை 22ம் நாள் தொடங்கினார்.
அவரின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தலைவர் பிரபாகரனின் மன உறுதியைப் புரிந்துகொண்ட இந்திய அரசு கோரிக்கையை ஏற்றுத் தகவல் தொடர்பு சாதனங்களைத் திருப்பிக் கொடுத்தது. உண்ணாவிரதம் கைவிடப் பட்டது. இவ் உண்ணாவிரதம் குறித்து அப்போது சில பத்திரிகையாளர்கள் தலைவர் பிரபாகரனிடம் வினாத்தொடுத்தார்கள்.

பத்திரிகையாளர்-
 

உங்களுடைய அகிம்சைப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கும் போது இலங்கையிலும் அகிம்சை முறையிலே போராடலாமேஇ ஆயுதம் ஏந்திப் போராட வேண்டய அவசியம் ஏன்? என்று கேட்டார்கள். தலைவர் பிரபாகரன்"
உலகிலேயே தன்னுடைய சுதந்திரத்தைப் பெறுவதற்கு அகிம்சை முறையில் போராடி வெற்றி பெற்ற நாடு இந்தியா. எனவே அகிம்சைப் போராட்டத்தின் மகத்துவத்தைப் புரிந்திருக்கிற இந்தியாவில் எனது அகிம்சைப் போராட்டத்திற்கு வெற்றிகிடைத்திருக்கிறது. ஆனால் மனித நேயமற்ற இனவெறிச் சிங்கள அரசிடம் அகிம்சை முறை எடுபடாது. எனவேதான் தமிழீழத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறோம்" என்றார்.


பெங்களுர் மாநாடு
 

இதற்குப் பின் பெங்களுரில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கள அரசின் சனாதிபதி Nஐ.ஆர் nஐயவர்த்தனா வந்தபோது அவருடன் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தைத் தமிழர்இ சிங்களவர்இ முஸ்லிம் என்ற ரீதியில் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கலாம்~~ என்று Nஐ.ஆர். nஐயவர்த்தனா சொன்னதாக தலைவர் பிரபாகரனிடம் இந்திய அரச தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தலைவர் பிரபாகரனோ ~~வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாக இருப்பதனை ஒன்றாக இணைக்கவேண்டும் என்பதனை நாங்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் போதுஇ இரண்டை நாலாக கூறுபோடும் யோசனையை நாங்கள் எப்படி ஏற்கமுடியும்?~~ என்று கூறி நிராகரித்து விட்டார்.
அத்துடன் இந்த பெங்களுர் பேச்சுவார்த்தையில் தான்இ தலைவர் பிரபாகரனுக்கு முதல் அமைச்சர் பதவி தருவதாக Nஐ.ஆர். nஐயவர்த்தனா இந்திய அரசுக்கூடாக தெரிவித்தார். இதற்கு தலைவர் பிரபாகரன் ~~இது ஒரு மாயவலைஇ தமிழ் இனத்தை அழிப்பதற்கு வேறு வகையாகப் பின்னப்பட்ட சதிவலை. அதிகாரங்கள் எதுவுமற்றஇ நினைத்தால் சனாதிபதியால் கலைக்கக் கூடிய மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யமுடியாத பொம்மைப் பதவிதான் முதல் மந்திரிப் பதவி~~ என்று கூறி அதனைத் தூக்கி எறிந்துவி;ட்டார்.


தமிழீழம் திரும்புதல்
 

தமிழ் நாட்டில் இருக்கும் வரை தனக்கு மத்திய மாநில அரசுகளின் நிர்ப்பந்தம் இருந்து கொண்டேயிருக்கும். இந்திய அரசுடன் பேசவரும்போது டில்லியிலோ அல்லது சென்னையிலோ தன்னைக் கொலை செய்து தமிழீழப் போரை அழிக்க முயற்சிக்கலாம். மொத்தத்தில் தமிழ் நாட்டில் இருக்கும்வரை ஆபத்து நீடிக்கவே செய்யும். எனவே தமிழீழம் திரும்பிச் செல்வதன் மூலம் விடுதலைப் போர் மேலும் வலுவடையும் என்ற உறுதியான முடிவில் தலைவர் பிரபாகரன் 1987ம் ஆண்டு தை 3ம் நாள் தமிழீழம் திரும்பினார்.

தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பியதனை அறிந்த சிறீலங்கா அரசும் அதன் படைகளும் கலக்கம் அடைந்த வேளையில்இ இந்திய அரசும் அதன் உளவுப்படையும் குழப்பம் அடைந்தன. இனி எவ்விதம் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடுவது என்று குழம்பிய நிலையில் சிறீலங்காப் படைகளின் சில மூர்க்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஒத்துழைத்து அதன்மூலம் தமிழீழ மக்களுக்கு ஏற்படும் பாரிய அழிவுகளில் இருந்து அவர்களை மீட்கும் ~~இரட்சகர்~~ என்ற போர்வையில் தமிழீழத்தில் தன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளலாம் எனத்திட்ட மிட்டு இந்திய அரசு செயற்பட்டது.

1987 வைகாசி 1ம் நாள் உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழமக்களுக்கு ஆற்றிய உரையில்இ ~~நாம் போராடிஇ இரத்தம் சிந்திஇ எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும்.

எமக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அடிமைகளாக அழிந்தொழிய வேண்டும் அல்லது போராடிச் சுதந்திரமாக வாழ வேண்டும். இதுதான் எமது அரசியல் தலைவிதி. இன்று இந்தத் தொழிலாளர் தினத்தில் நாம் ஒரு உறுதி செய்து கொள்வோம். அதாவது சுதந்திர தமிழீழ தனி அரசுதான் எமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு. இறுதியான தீர்வு. இந்தத் தனி அரசை அமைக்க நாம் எமது உயிர்இ உடல்இ ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம். இது எமது தொழிலாளர் தினப் பிரகடனமாக அமையட்டும்" என்றார்.


தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு
 

1987ம் ஆண்டு ஆடி 24ம் நாள் இந்திய அதிகாரிகள் சிலர் தலைவர் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து 'இந்தியாவின் பிரதமர் ராஐPவ் காந்தி உங்களைச் சந்தித்து முக்கியமான விடயமாகப் பேசவிரும்புவதாக" கூறித் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து செல்ல முயன்றார்கள்இ அவசரப்படுத்தினார்கள்.

இந்நிலையில் தமிழீழ மக்களுக்கு தலைவர் பிரபாகரன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் 'இன்று தமிழ் மக்கள் தங்கள் இலட்சியத்தை வென்று எடுக்கும் ஒரு தலைமையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறுதி யிட்டுக் கூறுகின்றேன். நீங்கள் எனக்கு அளித்துவரும் பொறுப்புக்களை நான் நேர்மையாகவும் உண்மையாகவும் உறுதியுடனும் செய்வேன் என நம்புகின்றேன். தற்காலத்தில் காணப்படும் இடைக்கால தீர்வுகள் எமது பிரச்சினையின் தீர்வாக அமையாது.

எனவே தமிழ் மக்களின் நிரந்தரமானஇ நிம்மதியானஇ சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நிரந்தர தீர்வுக்காகவே நான் பாடுபடுகின்றேன். இத் தீர்வு தமிழீழம் என்றே நான் நம்புகிறேன். இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தியின் விசேட அழைப்பின் பேரிலேயே நான் தமிழீழத்தைவிட்டு

உத்தியோக பூர்வமாக இந்தியா செல்கின்றேன்" என்று கூறிவிட்டு இந்திய அரசு அனுப்பி இருந்த இராணுவ கெலிகொப்டரில் டில்லிக்கு புறப்பட்டார். போகும் வழியில் தமிழகத்தின் முதலமைச்சர் M.G.R ஆரை சந்தித்துப் பேசினார். அப்போதும் எதற்காக இந்த அவசர அழைப்பு என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. டில்லி சென்ற தலைவர் பிரபாகரனையும் அவரது ஆலோசகர்களையும் ~அசோகா ஹொட்டலில்~ தங்கவைத்தனர்.


இந்தியாவின் சிறீலங்காவுக்கான தூதுவர் தீட்சித்இ இந்திய வெளிநாட்டுத்துறைச் செயலாளர் மேனன் உட்படப் பல அதிகாரிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து இந்தியாவும் சிறீலங்காவும் செய்து கொள்ளவிருக்கும் ~ஒப்பந்தம்~ பற்றி முதன்முதலாகத் தெரிவித்தார்கள். இதைக் கேட்டதும் தலைவர் பிரபாகரன் அதிர்ச்சி அடைந்தார். ஒப்பந்தத்தின் பிரதிகளை அவரிடம் கொடுத்துவிட்டு உடனே திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தினை ஏற்கமுடியாது என்று தலைவர் பிரபாகரன் மறுத்தார். தலைவர் பிரபாகரனை சம்மதிக்க வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தலைவர் பிரபாகரன் உறுதியாக ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார். இந்தியப் பிரதமர் சந்திக்க விரும்புவதாக கூறி அழைத்துச் சென்றவர்கள்இ பிரதமரும் தலைவர் பிரபாகரனும் சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை. இடையில் நான்கு நாட்கள் பறந்தோடின.


தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார் என்பது திட்டவட்டமாகத் தெரிந்ததும் தமிழகத்தில் இருந்த இந்தியாவின் அடிவருடிகளான மற்றைய தமிழ் குழுக்களின் பிரதிநிதிகள் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். சொல்லி வைத்தபடியே ஒப்பந்தத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தி அறிவித்தார். யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆடி 29ம் நாள் கொழும்பு செல்லப் போவதாகவும் அறிக்கை விட்டார்.


இதற்குப் பின்னர் தலைவர் பிரபாகரனை இந்தியப் பிரதமர் சந்தித்தார். அப்போது தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்திலுள்ள பலகுறைகளைச் சுட்டிக் காட்டினார். ஆனால் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகப் பொய்யான செய்திகள் இந்திய அதிகாரிகளால் தொடர்பு சாதனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. உடனே தலைவர் பிரபாகரன் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த அசோகா ஹொட்டலைச் சுற்றி 'கறுப்புப் பூனைகள்" என்ற இந்திய கொமாண்டோப் படைப்பிரிவினர் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.

இந்திய - சிறீலங்கா ஒப்பந்தம்
 

1987ம் ஆண்டு ஆடி மாதம் 29ம் நாள் தமிழீழ மக்களின் ஒப்புதல் இன்றிஇ தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒப்புதல் இன்றிஇ தமிழீழ மக்களின் விடுதலையே தன் உயிர்மூச்சு என்று சொல்லி தமிழீழ விடுதலைப் போரை வழிநடத்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் ஒப்புதல் இன்றி அவரை டில்லியில் ஹொட்டலில் பூட்டி வைத்துவிட்டுஇ பிராந்திய வல்லரசு என்ற இறுமாப்புடன் இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தி சிறீலங்காப் பிரதமர் Nஐ.ஆர். nஐயவர்த்தனாவுடன் இந்தியாவின் பூகோள நலனுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இந்திய இராணுவம் தமிழீழப் பகுதிகளுக்கு 'அiதிப்படை" என்ற பெயரில் அனுப்பப்பட்டது.


ஒப்பந்தம் செய்துவிட்டு இந்தியா திரும்பிய இந்தியப்பிரதமர் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துச் சில உறுதிமொழிகளை அளித்தார். இந்த உறுதி மொழிகளைப் பெற்றுக் கொண்ட தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பினார்.



தொடர்ச்சியை படிக்க....CLICK HERE.....தமிழீழம் வரலாறு-8

0 comments:

""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா

MEMBERS

Kokilam Teacher Farewell Day, Kavalkinaru

http://www.youtube.com/watch?v=LH80Q35Ykrw&feature=colike

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP