1

பங்குச் சந்தை பயில்வோம்-13

BULLISH HARAMI

இந்த அமைப்பு சந்தையில் வீழ்ச்சிகள் நடந்து கொண்டிக்கும் போது ஏற்படும் வடிவமாகும், HARAMI என்பது ஜப்பானிய மொழியில் கற்பம் (தாய்மை) அடைந்து இருப்பது என்று பொருள், இது போன்ற அமைப்பு CHART படங்களில் சந்தையின் இறக்கத்தில் ஏற்படுமாயின், இறக்கம் முடிந்து உயர்வதற்கான ஏற்பாடுகள் இனி தொடங்கு என்று பொருள் கொள்ளலாம், சரி இந்த அமைப்பு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்,
சந்தையில் இறக்கம் நடந்து கொண்டிருக்கும் போது, அந்த இறக்கம் ஒரு முடிவுக்கு வரும் சூழ்நிலைகளை இந்த அமைப்பு சுட்டிக்காட்டும், அதாவது முதல் நாள் CANDLE ஆனது நல்ல இறக்கத்துடன் (SOLID RED CANDLE) முடிவடைந்து இருக்க வேண்டும், பிறகு அடுத்த நாள் CANDLE இன் தொடக்கம், முதல் நாள் CANDLE இன் CLOSE புள்ளிக்கு மேலே ஆரம்பித்து, தொடர்ந்து உயர்ந்து, முதல் நாள் OPEN புள்ளிக்கு கீழேயே முடிவடைய வேண்டும், அதாவது முதல் நாள் CANDLE க்கு உள்ளேயே இரண்டாம் நாள் OPEN, HIGH, LOW, CLOSE ஆகிய அனைத்தும் இருக்க வேண்டும், அதோடு மட்டும் இல்லாமல், இரண்டாம் நாள் EMPTY GREEN என்ற முறையில் நல்ல VOLUME உடன் உயர்ந்து இருக்க வேண்டும், இப்படி இருந்தால் அது BULLISH HARAMI என்று பெயர்,
இதனுடன் மூன்றாம் நாள் CANDLE உம் உயர்ந்து, இரண்டாம் நாளின் HIGH புள்ளியை கடந்து, புதிய உயரங்களுடன் முடிந்து இருக்க வேண்டும், இப்படி ஏற்ப்பட்டால் சந்தையோ அல்லது ஒரு பங்கோ தற்பொழுது உள்ள TREND இல் இருந்து (BEAR TREND TO BULLISH TREND ) மாறப்போகிறது என்று கொள்ளலாம், இரண்டாம் நாள் CANDLE சில சமயங்களில் EMPTY GREEN என்ற முறையில் இல்லாமல், கூட்டல் குறியை போல கூட இருக்கலாம், அதாவது DOJI ஐ போல, அப்படி இருந்தாலும் மூன்றாம் நாள் CANDLE ஐ பொறுத்து நாம் இந்த அமைப்பை உறுதி செய்யலாம், படத்தை பாருங்கள்
BULLISH HARAMI PICTURE 1

BEARISH HARAMI
இந்த அமைப்பு BULLISH HARAMI க்கு எதிர்பதமானது, இது போன்ற அமைப்புகள் சந்தையின் உயரத்தில் ஏற்படும் சூழ்நிலையில், பலம் வாய்ந்ததாக இருக்கும், மேலும் இந்த அமைப்பு சந்தை நன்றாக உயர்ந்த பின்பு CHART படங்களில் ஏற்படுமாயின், DOWN TREND ஆரம்பம் ஆகப்போகிறது, என்பதினை சொல்லும் ஒரு நிகழ்வாக எடுத்துக்கொள்ளலாம், சரி இந்த அமைப்பு எப்படி உருவாகும் என்பதினை பார்ப்போம் வாருங்கள்,
அதாவது நன்றாக உயர்ந்து நிற்கும் சந்தையில் முதல் நாள் CANDLE நல்ல உயர்வுடன் EMPTY GREEN என்ற முறையில் முடிவடைந்து இருக்க வேண்டும், அடுத்து இரண்டாம் நாள் CANDLE, GAP DOWN என்ற முறையில், முதல் நாள் CANDLE இன் CLOSE புள்ளிக்கு கீழே ஆரம்பித்து, தொடர்ந்து இறங்கி முதல் நாள் CANDLE க்கு உள்ளேயே முடிவடைய வேண்டும், மேலும் இரண்டாம் நாள் CANDLE இன் OPEN, HIGH, LOW, CLOSE எல்லாம் முதல் நாள் CANDLE க்கு உள்ளேயே இருக்க வேண்டும், மேலும் SOLID RED CANDLE என்ற முறையிலும் இருக்க வேண்டும்,
இப்படி இருந்தால் இதற்க்கு BEARISH HARAMI என்று பெயர், இது சந்தையின் TREND REVERSAL ஐ குறிக்கும், தொடர்ந்து மூன்றாம் நாள் CANDLE உம், இரண்டாம் நாள் CANDLE இன் LOW புள்ளிக்கும் கீழே முடிவடைய வேண்டும், மேலும் இரண்டாம் நாள் CANDLE சில சமயங்களில் EMPTY GREEN என்ற முறையில் இல்லாமல், கூட்டல் குறியை போல கூட இருக்கலாம், அதாவது DOJI ஐ போல, அப்படி இருந்தாலும் மூன்றாம் நாள் CANDLE ஐ பொறுத்து நாம் இந்த அமைப்பை உறுதி செய்யலாம், படத்தை பாருங்கள்
BEARISH HARAMI PICTURE 2


DARK CLOUD COVER
இந்த விதமான அமைப்பு சந்தை உயரத்தில் இருக்கும் போது ஏற்படுவதாகும், இது போன்ற அமைப்புகள், சந்தையில் ஒரு இறக்கம் வரப்போகிறது என்பதினை சுட்டிக்காட்டும் ஒரு நிகழ்வாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் இந்த அமைப்பானது நாம் முன்னர் பார்த்த ENGULFING BULL என்ற அமைப்பிற்கு எதிர்பதமானது, முதல் நாள் நன்றாக உயர்ந்து EMPTY GREEN CANDLE என்ற முறையில் அமைந்து இருக்க வேண்டும்,
அதற்க்கு அடுத்து இரண்டாம் நாள், முதல் நாள் HIGH புள்ளியை கடந்த OPEN ஆக இருக்க வேண்டும், பிறகு உயரங்களில் தாக்கு பிடிக்க முடியாமல் கீழே வீழ்ச்சி அடைந்து, முதல் நாள் CANDLE இன் மையப்பகுதிக்கு கீழே வரைக்கும் நன்றாக வந்து, இன்றைய LOW புள்ளியிலோ, அல்லது அதன் அருகிலோ முடிந்து இருக்க வேண்டும், இப்படி ஏற்படுமாயின் அதற்க்கு DARK CLOUD COVER என்று பெயர்,
மேலும் இரண்டு நாள் CANDLE களும் நல்ல நீளமுடன் இருக்க வேண்டும், தொடர்ந்து மூன்றாம் நாளும் புதிய LOW புள்ளிகளுடன் முடிந்து இருக்க வேண்டும், இப்படி ஏற்பட்டால் TREND REVERSAL, அல்லது CORRCTION வரப்போகிறது என்று கொள்ளலாம் மேலும் நீங்கள் SHORT SELL செய்ய வேண்டுமாயின், உங்களது S/L, இரண்டாம் நாள் HIGH புள்ளியாகும் , படத்தை பாருங்கள்
DARK CLOUD COVER PICTURE 3

THREE WHITE SOLDIER BULLISH PATTERN
இந்த முறையில் வரும் BULLISH PATTERN ஆனது, சந்தையின் உயர்வை உறுதி செய்யும் வழிகளில் ஒன்று, இது போன்ற அமைப்பானது சந்தையில் ஒரு குறிப்பிட்ட வீழ்ச்சிக்கு பிறகோ, அல்லது CONSOLIDATION எனப்படும் அடுத்தகட்ட உயர்வுக்கான செயல்களுக்கு பிறகோ ஏற்ப்படும் ஒரு அமைப்பாகும், இந்த அமைப்பு CHART படங்களில் உண்டானால் நாம் தொடர்ந்து அந்த பங்கில் LONG POSITION இல் இருக்கலாம், அதே நேரம் இந்த அமைப்பு உருவான பிறகு, வேறு சில விசயங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்,
அதாவது TREND LINE BREAK OUT, அல்லது வேறு ஏதாவது உருவங்களின் BREAK OUT (CHANNEL, TRIANGLE, H&S… ) கிடைக்கின்றதா என்பதினையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், அப்படி எல்லாம் சேர்ந்து கிடைத்தால், தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், சரி இந்த அமைப்பு எப்படி உருவாகும் என்பதினை பார்ப்போம், அதாவது இந்த தலைப்பின் பெயரில் இருப்பது போல் மூன்று EMPTY GREEN CANDLE, தொடர்ந்து மூன்று நாட்கள் நல்ல முறையில் VOLUME உடன் சந்தையில் அல்லது ஒரு பங்கில் ஏற்ப்பட்டால், உயர்வுகள் தொடரும்,
அதாவது முதல் நாள் CANDLE தொடங்கிய புள்ளியில் இருந்து நல்ல VOLUME உடன் உயர்ந்து EMPTY GREEN என்ற முறையில் முடிவடைய வேண்டும், அதே போல் இரண்டாம் நாள் CANDLE, முதல் நாள் முடிவடைந்த CLOSE புள்ளிக்கும் கீழே (முதல் நாள் CANDLE க்கு மையத்தில்) தொடங்கி, தொடர்ந்து உயர்ந்து, முதல் நாள் HIGH புள்ளியை கடந்து, அதற்கும் மேலே முடிவடைய வேண்டும், மூன்றாவது நாள் CANDLE இரண்டாவது நாள் CLOSE புள்ளிக்கும் கீழே தொடங்கி, இரண்டாவது நாள் HIGH புள்ளியை கடந்து, அதற்கும் மேலே முடிவடைய வேண்டும், இப்படி நடந்தால் அதற்க்கு பெயர் THREE WHITE SOLDIER BULLISH PATTERN,
மேலும் ஒவ்வொரு CANDLE இன் நீளமும் முதல் நாள் CANDLE இன் நீளத்தை விட அதிகமாக இருக்க வேண்டும், அப்படி இல்லாமல் உயரம் குறைவாக இருக்கும் பட்சத்தில், சந்தை தனது சக்தியை இழந்து கீழே வரும் என்று கருத வேண்டி இருக்கும், ஆகவே கவனமாக கையாள வேண்டும், மேலும் நான்காம் நாள் உருவாகும் CANDLE ஆனது இறங்கி வந்தாலும், முதல் நாள் CANDLE இன் LOW புள்ளியை கடந்து முடிவடையக்கூடாது,
மேலும் இந்த TREND REVERSAL பலம் வாய்ந்ததாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஐந்தாம் நாள் CANDLE, (ஒருவேளை நான்காம் நாள் கீழே நன்றாக இறங்கி மேலே சொன்னது போல அமைந்தால்) GAP UP என்ற முறையிலோ, அல்லது NORMAL OPEN என்ற முறையில் தொடங்கினாலும், நான்காம் நாள் CANDLE இன் HIGH புள்ளியை விட உயர்ந்து இருக்க வேண்டும், அப்படி இருந்தால் உயர்வுகள் தொடரும், இதற்க்கு முதல் நாள் CANDLE இன் LOW புள்ளி S/L என வைத்துக்கொள்ளலாம், இருந்தாலும் வேறு சில விசயங்களையும் கவனித்து உங்கள் S/L ஐ கடைபிடிக்கலாம், (எப்படி என்று இன்னும் உள்ளே செல்லும் போது பார்ப்போம்)
அடுத்து வேறு சில விசயங்களையும் நாம் கவனிக்க வேண்டும், அதாவது சந்தை OVER BOUGHT என்ற நிலையில் இருக்கும் போது, இது போன்ற அமைப்புகள் வந்தால் DOUBLE TOP, TRIPLE TOP, TREND LINE RESISTANCE என்று ஏதாவது அருகில் இருக்கும் விசயங்களுடன் RESISTANCE எடுத்து திரும்பிவிடும் வாய்ப்புகளும் உள்ளது, ஆகவே கவனமாக பார்த்து கையாள வேண்டும்இந்த படத்தை பாருங்கள்….
THREE WHITE SOLDIER PICTURE – 4

THREE BLACK CROWS
நாம் முன்னர் பார்த்த THREE WHITE SOLDIER க்கு அப்படியே நேர் எதிர்பதம், இது போன்ற அமைப்பு சந்தை TOPS OUT ஆகும் சூழ்நிலையிலோ, அல்லது நன்றாக உயர்ந்து இருக்கும் போதோ ஏற்படும், முன்னர் பார்த்தது போலவே முதல் நாள் CANDLE நன்றாக இறங்கியும், அதற்கு அடுத்த இரண்டாம் நாள் CANDLE, முதல் நாள் CANDLE இன் மையப்பகுத்திக்கு அருகில் தொடங்கி, முதல் நாள் LOW புள்ளிக்கும் கீழே சென்று, இரண்டாம் நாளானா இன்றைய LOW புள்ளிக்கும் அருகிலோ, அல்லது அந்த புள்ளியிலோ முடிவடைய வேண்டும்,
மூன்றாம் நாள் CANDLE, இரண்டாம் நாள் CANDLE க்கு மையப்பகுதிக்கு அருகில் தொடங்கி, தொடர்ந்து நன்றாக இறங்கி, இரண்டாம் நாள் LOW புள்ளிக்கும் கீழே சென்று, அங்கேயோ அல்லது அருகிலோ முடிவடைய வேண்டும், இப்படி ஏற்படுமாயின் இதற்க்கு THREE BLACK CROWS என்று பெயர், மேலும் நான்காம் நாளும் இதற்க்கு துணையாக வீழ்ச்சிகள் இருக்க வேண்டும்,
அடுத்து வேறு சில விசயங்களையும் நாம் கவனிக்க வேண்டும், அதாவது சந்தை OVER SOLD என்ற நிலையில் இருக்கும் போது, இது போன்ற அமைப்புகள் வந்தால் DOUBLE BOTTOM, TRIPLE BOTTOM, TREND LINE SUPPORT என்று ஏதாவது அருகில் இருக்கும் விசயங்களுடன் SUPPORT எடுத்து திரும்பிவிடும் வாய்ப்புகளும் உள்ளது, ஆகவே கவனமாக பார்த்து கையாள வேண்டும், படத்தை பாருங்கள்
THREE BLACK CROWS PICTURE 5

இதுவரை CHART படங்களில் ஏற்ப்படும் ஒற்றை CANDLE மூலம் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், இரண்டு CANDLEகள் இணைந்து ஏற்படுத்தும் சில முக்கியமான மாற்றங்கள், மூன்று CANDLE கள் இணைந்து ஏற்படுத்தும் மாற்றங்கள் என வருசயாக பார்த்து வந்தோம், இந்த விஷயங்கள் எல்லாம் சந்தை உயரத்தில் இருக்கும் போதும், அல்லது சந்தை நன்றாக வீழ்ச்சி அடைந்து இருக்கும் போதும், அடுத்து என்ன விதமான நகர்வுகள் ஏற்படலாம் என்பதினை சுட்டிக்காட்டும் முக்கியமான வடிவங்கள் ஆகும்,
இதனை தொடர்ந்து பயிற்ச்சி செய்யுங்கள், முக்கியமாக சந்தைகளில் TREND REVERSAL ஏற்படுவதை, இந்த மாதிரியான வடிவங்களை வைத்து நாம் அறிந்து சுதாரித்து கொள்ளலாம், சரி இது வரை TECHNICAL ANALYSINGகிற்கு தேவையான அடிப்படை விஷயங்கள் யாவும் முடிந்து விட்டன, அடுத்த வாரம் TECHNICAL ANALYSING இன் முக்கியமான பகுதிக்குள் செல்வோம்

0 comments:

""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா

MEMBERS

Kokilam Teacher Farewell Day, Kavalkinaru

http://www.youtube.com/watch?v=LH80Q35Ykrw&feature=colike

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP