1

பங்குச் சந்தை பயில்வோம்-3

கடந்த வார பதிவில் TECHNICAL ANALYZING இன் தந்தை என்று வர்ணிக்கப்படும் திரு CHARLES DOW அவர்கள் பற்றி கொஞ்சம் பார்த்தோம், மேலும் அவர் TECHNICAL ANALYZING பின் தொடருபவர்கள் கண்டிப்பாக கவனம் கொள்ள வேண்டிய PRINCIPLES OF TECHNICAL ANALYZING இல் உள்ள மூன்று முக்கியமான தகவல்களில் இரண்டைப் பற்றி சற்று விரிவாக பார்த்தோம் மீதியை இப்பொழுது பார்ப்போம்,

கடந்த வாரம் இரண்டாவது விதியான “AVERAGES ARE DISCOUNTS EVERY THING (MARKETS ARE ALWAYS RIGHT)” என்ற தலைப்பின் கீழ் சந்தை எதனால் விழுகிறது என்று பார்த்தோம் மேலும் இது போன்று நடப்பதினால் சந்தையின் மீதே சந்தேகம் படும்படியான என்னம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பது இயற்க்கை தான், இருந்தாலும் அதற்கும் காரணம் உண்டு, அதாவது இது போன்ற உயர்வுகள் ஏற்படுவதற்கு காரணமாக அநேக விசயங்களை இங்கு பட்டியலிட முடியும், உதாரணமாக ஒரு சில விசயங்களை தருகிறேன்,
இது போன்று உயர்வதற்கு நமது ஆசையும் ஒரு காரணமே, அதாவது ஏதாவது ஒரு பொருளுக்கு DEMAND ஏற்படும் சூழ்நிலை வந்தால் எந்த ஒரு வியாபாரியும் எப்பாடுபட்டாவது அந்த பொருளை இப்பொழுது வாங்கி விட வேண்டும் பிறகு நல்ல லாபம் வரும் என்ற எதிர்கால யோசனையோடு வாங்க முனைவோம் இல்லையா அது போன்றுதான், இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு உதாரணத்துடன் சொல்லலாம்,
உங்கள் ஊரின் பேரூர்ந்து நிலையம் தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஒரு வசதியான இடத்திற்கு மாற்ற நகராச்சியில் ஒரு யோசனை உள்ளதாக வைத்துக்கொள்ளுங்கள், (இந்த யோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு (அரசாங்கம் உட்பட), நடை முறைக்கும் வரலாம் அதே நேரம் பேச்சளவிலே இருந்து நடக்காமலும் போகலாம் என்பதையும் மனதில் ஒரு பக்கம் வைத்துக்கொள்ளுங்கள்),
உங்களுக்கு நகராச்சியில் இந்த விஷயத்தை பற்றி பேசும் நபர்களில் ஒருவரோடு நல்ல தொடர்பு உள்ளது என்றும் வைத்துக்கொள்ளுங்கள், அந்த நண்பர் உங்களிடம் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்கிறார் என்றும் வைத்துக்கொள்ளுங்கள், மேலும் நீங்கள் சாதாரண ஒரு பிரஜை என்று இருந்தால் அந்த விசயத்திற்கு உங்களின் வெளிப்பாடு இப்படி இருக்கலாம் அதாவது அந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் அப்படியா வந்தால் நல்லது தான் இப்போ இருக்குற BUS STAND ரொம்ப இடைஞ்சலா இருக்கு புதிதாக வந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்று சொல்லி விட்டு சென்று விடுவீர்கள்,
நீங்கள் சாதாரண நபராக இல்லாமல் ஒரு புத்திசாலியான வியாபாரியாக இருந்தால் எப்படி யோசிப்பீர்கள், இப்படித்தான் இருக்கும், ஆக ஊருக்கு ஒதுக்கு புறத்தில் BUS STAND வரப்போகிறது! இப்போ அந்த இடம் யாரும் சீண்டுவார் இல்லாமல் உள்ளது, BUS STAND வந்து விட்டால் அந்த இடங்களின் மதிப்பு எங்கோ சென்று விடும், ஆக இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் அங்கு நாலு ஏக்கர் நிலம் வாங்கிப்போட்டால் பின்னால் நல்ல காசு பார்க்கலாமே என்று எண்ணி உங்க்ளிடம் இருப்பதையும், மீதிக்கு கடனை உடனை வாங்கியாவது அங்கு நாலு ஏக்கர் நிலம் வாங்க யோசிப்பீர்கள், மேலும் வாங்கியும் விடுவீர்கள், பிறகு இந்த விஷயம் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்து ஒவ்வொருவருக்காக தெரிய ஆரம்பிக்கும்,
அப்படி வரும் போது உங்களைப்போல் எத்தினை புத்திசாலி வியாபாரிகள் இருப்பார்கள் ஆக அனைவரும் முண்டியடித்து வாங்க ஆரம்பிப்பார்கள் ஆக விலை ஜரூராக ஏற ஆரம்பிக்கும் முதலிலேயே நீங்கள் வாங்கி விட்டதால் இப்பொழுது உங்களுக்கு நல்ல லாபம் இருக்கும், அதே நேரம் அந்த இடத்தின் மதிப்பு உயர உயர தரகர்கள் என்ன செய்வார்கள் நில உரிமையாளர்களிடம் பேசி நல்ல விலைக்கு விற்று தருவதாக மேலும் விலையை ஏற்றி விடுவார்கள், இந்த தரகர்கள் மூலம் வெளியூரில் உள்ளவர்கள் கூட என்ன ஏது என்று தெரியாமல் நிலத்தில் தானே போடுகிறோம் என்று வாங்குவார்கள் இது போன்று அனைவரும் BUS STAND வரும் என்ற கோணத்தில் எங்கேயோ உள்ள நிலத்தின் விலையை எங்கேயோ ஏற்றி விடுவார்கள்,
இதில் உண்மை என்ன வென்றால் BUS STAND வந்த பிறகு இந்த நிலத்தின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது, இருந்தாலும் முண்டியடித்து வாங்கி விடுவார்கள் (இப்பொழுது நீங்கள் வாங்கிய நிலத்தின் விலை நீங்கள் வாங்கியதை விட எங்கேயோ இருக்கும், அதே நேரம் நேற்று, அதற்க்கு முந்தய தினம் அந்த நிலங்களை வாங்கியவர்கள் உச்ச விலையில் தான் வாங்கி இருப்பார்கள் இல்லையா , சரி வாங்கி ஆகிவிட்டது, வாங்கியவர்கள் எல்லாம் எதற்காக வாங்கினார்கள் அது முக்கியம் இல்லையா அதாவது BUS STAND இந்த AREA வில் வரப்போகிறது என்ற யூகத்தினால், இப்பொழுது BUS STAND வந்தால் என்ன நடக்கும் வர வில்லை என்றால் என்ன நடக்கும் என்று பார்ப்போம் அது முக்கியம் இல்லையா,
சரி BUS STAND வந்து விட்டதாக வைத்துக்கொள்ளுங்கள், இதுவரை ஊகத்தில் இருந்த விஷயம் நடந்தே விட்டது அப்படியானால் விஷயம் வெளி வந்தவுடன் இதுவரை வாங்கியவர்கள் தங்களது விலைகளை அதிகமாக சொல்வார்கள், அதே நேரம் இன்னும் நிலம் வாங்காமல் விஷயம் வந்த பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்தவர்கள் எல்லாம் முண்டியடித்துக்கொண்டு வாங்க முர்ப்படுவார்கள் விளைவு விலை கண்ணா பின்ன என்று உயரும் ஆகவே அனைவருக்கும் முண்டியடிக்கும் ஆசை அதிகமாகும்,
அதே நேரம் இந்த BUS STAND இங்கு வந்ததினால் இந்த இடத்தின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று மெல்ல சில அதி புத்திசாலிகளின் மனதில் ஒரு கேள்வி எழும், அவர்கள் அந்த விஷயம், இந்த விஷயம் என்று எல்லாத்தையும் கணக்கிட்டு இது தான் அதன் உண்மையான விலையாக இருக்கும் என்று ஒரு அனுமானத்திற்கு வருவார்கள் அப்படி வந்த பின் தற்பொழுது விற்றுக்கொண்டு இருக்கும் விலையையும் இவர்கள் கணக்கிட்ட விலையும் ஒப்பிட்டு பார்க்கும் போது விலை மிக அதிகமாக இருந்தால் மெல்ல யாருக்கும் தெரியாமல் விற்க ஆரம்பிப்பார்கள்,
ஆக முன்பை போலவே இந்த விசயமும் மெல்ல அனைவருக்கும் பரவ ஆரம்பிக்கும் ஆக அனைவருக்கும் தெரிந்தால் என்ன ஆகும் வந்த வரைக்கும் லாபம் என்று அனைவரும் விற்க ஆரம்பிப்பார்கள், அப்படியானால் உச்ச விலையில் இருந்த பொழுது வாங்கியவர்களின் நிலை என்ன ஆகும், நீங்களே யோசித்து பாருங்கள் இப்படித்தான் பங்கு சந்தையில் உச்சத்தில் இருக்கும் போது வாங்கியவர்களின் நிலைமை மோசமாகி விடுகிறது, சரி நாம் மேலே பார்ப்போம்,
முன்னால் நிலத்தின் விலையை கணக்கிட்டு இது தான் சரியான விலை என்று முடிவு செய்தவர்கள், அந்த குறிப்பிட்ட விலைக்கு கீழே அந்த நிலத்தின் விலை வந்தவுடன் மறுபடியும் விற்றதை மீண்டும் லாபத்துடன் வாங்க ஆரம்பிப்பார்கள் மறுபடியும் உயரும் நாளாக நாளாக அந்த நிலத்தின் மதிப்பு அந்த இடத்தில் உருவாகும் வியாபார வாய்ப்புகள் தேவைகள் இவற்றை பொறுத்து உயரவோ அல்லது வீழ்ச்சியடயவோ செய்யும், எப்படி பார்த்தாலும் BUS STAND உள்ள இடம் வியாபார வாய்ப்புக்களினாலும், தேவைகளினாலும் உயரத்தான் வாய்ப்புகள் உள்ளதால் முன்பு உச்சத்தில் வாங்கியவர்கள் பொறுத்து இருந்து லாபத்துடன் கொடுக்கலாம் அல்லது பயந்து பதட்டப்பட்டு முன்பே கொடுத்து நட்டம் ஆகியும் இருக்கலாம், அது அவர்களின் மன நிலையை பொறுத்தது,
சரி இப்பொழுது அங்கு BUS STAND வர வில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது என்ன நடக்கும்! வந்த வரைக்கும் போதும் என்று அடித்து பிடித்து விற்க ஆரம்பிப்பார்கள் முதலில் சில பேர் விவரம் தெரியாமல் வாங்கி மட்டிக்கொள்ளவும் செய்வார்கள்,( இங்கு BUS STAND வரவில்லை என்ற விவரம் தெரியாமல் தற்பொழுது இறங்கி வருகிறதே வாங்கி விடலாம் என்று புதிதாக வாங்கி மாட்டிக்கொள்ளவும் செய்வார்கள்(இப்படி தான் அதிகமானோர் குறிப்பிட்ட பங்குகளில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் "ஆகா நாம் எவளவு முயன்றும் வாங்க முடியாமல் விலை ஏறிய பங்கு இப்பொழுது இறங்கி உள்ளதே என்ன வேகமாக ஏறியது இந்த பங்கு அது மாதிரி மறுபடியும் ஏறினாலும் ஏறிவிடும் நாம் வாழ்க்கையில தவறு செய்யக்கூடாது வாங்கிப்போட்டு விட வேண்டும் என்று எதிர்பார்த்த விஷயம் நடக்காததினால் இறங்கிக்கொண்டு இருக்கும் பங்கை வாங்கி (ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் விற்றுக் கொண்டிருப்பார்கள்) மாட்டிக்கொள்வார்கள்")
பிறகு விஷயம் அனைவருக்கும் தெரிந்த பின் விற்க ஆரம்பிப்பார்கள் அப்பொழுது என்ன நடக்கும் முன்னால் விற்ற விலையை விட கீழே கூட வந்து விடும் அப்பொழுது உச்சத்தில் வாங்கியவர்களின் நிலை என்ன நீங்களே முடிவு செய்யுங்கள், சரி இந்த மிக நீண்ட கதையில் பங்கு சந்தையை பொருத்தி பாருங்கள் தெளிவாக உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரியும், இங்கு நடந்த உயர்வு தாழ்வுகள் எல்லாம் ஒரு விஷயம் நடந்தால் (BUS STAND வரப்போகிறது) என்ன ஆகும் என்ற யூகத்தின் அடிப்படையில் நடந்தது, இதில் விவரம் தெளிவாக தெரிந்து வாங்கியவர்கள் அநேகம் பேர் அதே போல் விவரம் இன்னதென்றே தெரியாமல் வாங்கி மாட்டியவர்கள் அநேகம் பேர்,
இப்படித்தான் சந்தையிலும் நடக்கிறது இப்படி நிலத்தின் விலை தேவையில்லாமல் உயர்ந்ததுக்கும் மறுபடியும் விஷயம் நடக்க வில்லை என்றதால் வீழ்ந்ததுக்கும் யார் காரணம்? நம்முடைய லாபம் பார்க்கும் ஆசை தானே, இதே தான் பங்கு சந்தையில் நடக்கிறது, நான் சொன்னது ஒரு உதாரணம் தான் இது போல அநேக விஷயங்கள் உள்ளது, அனைத்து விசயங்களும் சில விளைவுகளை தரும் அந்த விளைவுகள் நல்லதாகவும் இருக்கலாம் கெட்டவயாகவும் இருக்கலாம், எது எப்படியோ நாம் பங்கு கொண்டால் அந்த விளைவுகளை நாம் அனுபவித்து தான் ஆகவேண்டும் இல்லையா,
சரி அதை விடுங்கள் இப்பொழுது நிலத்தின் விலை உயர்ந்ததுக்கு நம்முடைய லாபம் பார்க்கும் அதிக ஆசை காரணம், அதே நேரம் இந்த இடத்தின் உண்மையான கணக்கீட்டு விலை, தற்பொழுது விற்கும் விலையை விட குறைவு என்ற அளவு தெரிந்த பின் சந்தை தானாக கீழே வந்ததிற்கு நமது பயம் காரணம், இந்த விஷயம் நடக்க வாய்ப்பே இல்லை என்றதும் பழைய விலைக்கும் கீழே வந்ததிற்கும் நமது பயம் காரணம், ஆக சந்தை தன்னை எப்பொழுதும் சரியாகவே வைத்துக்கொள்ளும் அதே நேரம் தவறுதலாக ஏறி விட்டாலும் மறுபடியும் கீழே வந்து விடும் என்பது இந்த உதாரணத்தில் இருந்து உங்களுக்கு தெளிவாக தெரிந்து இருக்கும் இதை தான் DOW அவர்கள் “AVERAGES ARE DISCOUNTS EVERY THING (MARKETS ARE ALWAYS RIGHT)” என்று இரண்டாவது விதியாக சொல்லி இருந்தார் சரியா
மூன்றாவது விதி
PRIMARY TREND CAN NOT BE MANIPULATED
இந்த மூன்றாம் விதி முழுக்க முழுக்க TECHNICAL ANALYZING ஐ சார்ந்தது அதாவது ஒரு பங்கை ஆராய்வதற்கு அந்த பங்கின் விலைகளை வைத்து உருவாக்கப்பட்ட வரைபடத்தை தான் பயன்படுத்துவோம், அப்படி பயன்படுத்தும் போது அங்கு உருவாகும் உருவ அமைப்புகளில் இதுவரைக்கும் ஏற்ப்பட்ட LOW புள்ளிகளில் முக்கியமான இரண்டு புள்ளிகளை இணைத்து வரையப்படும் கோட்டினை இனி வரும் தினங்களில் அந்த பங்கில் ஏற்ப்படும் எந்த ஒரு பெரிய வீழ்ச்சியும் கடந்து கீழே செல்லாது என்பதினை தான் சொல்லி இருக்கின்றார், (இந்த விஷயத்தை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் அது இப்பொழுது சொன்னால் சரியாக இருக்காது இனி வரும் காலங்களில் வரை படங்களுடன் தேவையான நேரத்தில் இதை சொன்னால் தான் நன்றாக புரியும் அப்பொழுது சொல்கிறேன், சரி அடுத்த பதிவில் சிந்திப்போம்

0 comments:

""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா

MEMBERS

Kokilam Teacher Farewell Day, Kavalkinaru

http://www.youtube.com/watch?v=LH80Q35Ykrw&feature=colike

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP