1

பங்குச் சந்தை பயில்வோம்-5

கடந்த வாரம் OPEN விலையின் விளக்கம் பற்றி பார்த்தோம், அதில் OPEN மற்றும் HIGH, மேலும் OPEN மற்றும் LOW ஆகிய இரண்டு நிலைகள் பற்றி சொல்லி இருந்தேன், இதில் OPEN மற்றும் HIGH என்ற நிலையை ஒரே புள்ளியாக கொண்டு ஒரு பங்கு தனது வர்த்தகத்தை தொடங்கி தொடர்ந்து கீழே வந்தால் அந்த குறிப்பிட்ட HIGH புள்ளியை கடக்க முடியாமல் தினறுவதாகவும், அந்த குறிப்பிட்ட புள்ளியில் முக்கியமான தடைகள் இருப்பதாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும்,

மேலும் இந்த OPEN மற்றும் HIGH என்ற முக்கியமான புள்ளியை அந்த பங்கு மறுபடியும் மேலே கடந்தால் நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம் அதாவது தடையாக இருந்த புள்ளியில் தடையை பெற்று தொடர்ந்து மேலே உயரமுடியாமல் இது வரை தடுமாறி வந்த அந்த பங்கு இப்பொழுது அந்த தடையை உடைத்து முன்னேறுகிறது.
அப்படி என்றால் என்ன அர்த்தம்? அந்த பங்கின். சக்தி அதிகமாகி விட்டது என்றாகிவிடும், இதை நாம் உணர்ந்து கொண்டு அதற்க்கு தகுந்தார்ப்போல் நாம் நமது வர்த்தகத்தை அமைத்துக்கொள்ள வேண்டும், இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் இதுவரைக்கும் நம்மை எளிதாக தோற்கடித்த நமது எதிரியை நாம் வென்றுவிட்டோம் என்று அர்த்தம் அதேபோல் இதுவரை இருந்து வந்த சக்தியைவிட அதிக சக்தியை பெற்று அடுத்து மேலே உள்ள புள்ளிகளை நோக்கி அந்த பங்கு செல்லப்போகிறது என்று அர்த்தம்,
இதுபோலவே OPEN மற்றும் LOW என்ற நிலைகளை ஒரே புள்ளியாக பெற்ற பங்குகள் அந்த குறிப்பிட்ட புள்ளியை கீழே கடந்தால் மேலும் சக்தியை இழந்து இன்னும் இன்னும் கீழே செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக கொள்ளலாம், இது போன்ற நிகழ்வுகளுக்கு வேறு சில விசயங்களும் துணை நிற்க வேண்டும் அவைகள் என்ன என்ன என்று நாம் TECHNICAL வகுப்பிற்குள் இன்னும் சற்று தூரம் சென்றபின் தேவையான இடத்தில் பார்ப்போம், சரி இப்பொழுது மீதமுள்ள் HIGH, LOW, CLOSE ஆகியவற்றின் விளக்கங்களை பற்றி பார்ப்போம்
HIGH என்ற புள்ளி
HIGH என்ற புள்ளியை பற்றி பொதுவாக அல்லது மேலோட்டமாக சொல்லவேண்டும் என்றால், ஒரு பங்கு அன்றைய தினத்தின் இறுதி வர்த்தக நேரம் வரை (அதாவது மணி 3.30 வரை) உயர்ந்த அல்லது தொட்ட அதிக பட்ச புள்ளியை குறிக்கும் ஒரு குறியீடு ஆகும்,
சரி இந்த குறியீடைப்பற்றி நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம், இதை ஒரு விளக்கத்துடன் பார்த்தால் இந்த HIGH புள்ளியின் முக்கியத்துவம் சற்று எளிதாக புரியும் மேலும் இந்த HIGH புள்ளி தான் நாம் TECHNICAL ANALYSING செய்வதற்கு அதிகமாகவும் அடிக்கடியும் பயன்படுத்தப்போகும் புள்ளியும் கூட ஆகவே இந்த புள்ளியின் முக்கியத்துவத்தை நீங்கள் எளிதாகவும் உங்கள் மனதில் ஆழமாகவும் பதிந்து வைத்துக்கொண்டு எப்பொழுதெல்லாம் நமக்கு தேவையோ அப்பொழுதெல்லாம் அனிச்சை செயலாக நமது முன் வந்து நிற்க இந்த விளக்கம் தேவையானது தான்,
அதாவது நமக்கு அநேக எதிரிகள் உண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த எதிரிகளில் அதிக பலம் வாய்ந்த எதிரிகளும் உண்டு பலம் குன்றிய எதிரிகளும் உண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள், இப்படி இருக்கும் நேரத்தில் நாம் ஒரு பயணத்தை மேற்க்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள், ஆகவே நமது பயணத்தின் இடையே எந்த எதிரியாலும் நாம் தாக்கப்படலாம், அப்படி தாக்குதலுக்கு உட்பட்டு நாம் வருசயாக வீழ்த்திக்கொண்டு வரும் எதிரிகள் அனைவரும் நம்மை விட பலம் குன்றியவர்கள் என்ற வரிசையில் வந்து விடுவார்கள்,
அதே நேரம் எந்த எதிரியாவது நம்மை வீழ்த்தி பின்னடைய செய்தால், நாம் இங்கு தோற்றவர்கள் ஆகிவிடுவோம், சரி சிறிது நேரம் கழித்து சற்று இளைப்பாறி உணவு உட்க்கொண்டு சக்தியை ஏற்றிக்கொண்டு கொஞ்சம் ஆட்க்களையும் சேர்த்துக்கொண்டு மறுபடியும் அந்த எதிரியை வீழ்த்த செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்படியும் நாம் அந்த எதிரியிடம் தோற்றுப்போனால் அந்த எதிரி நம்மை விட அதிக பலம் வாய்ந்தவன் என்று தானே அர்த்தம், இப்பொழுது என்ன செய்வோம் ஒன்று வீர சொர்க்கம் அல்லது பின்னோக்கிய பயணம், இது தானே நடக்கும்,
இதேபோல் தான் ஒரு பங்கின் அன்றைய தினத்தின் HIGH புள்ளி என்பது அப்படிப்பட்ட பலம் வாய்ந்த எதிரி, அன்றைய தினத்தில் அந்த எதிரியை சமாளிக்க முடியாமல் அதாவது அந்த புள்ளியை கடந்து மேலே செல்ல முடியாமல் தடுமாறி துவண்டு விட்டதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், ஆகவே அந்த புள்ளி அந்த பங்கின் முக்கியமான எதிரி, சரி இதை நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் இங்கே முக்கியம், அதைப்பற்றியும் பார்ப்போம்

இங்கே அந்த HIGH புள்ளி நமக்கு எதிரி இல்லை, அந்த பங்குக்கு தான் எதிரி, ஆனால் நமது எதிரி யார் என்று நீங்கள் யோசித்தீர்களா நமது எதிரி நீங்கள் நினைப்பது போல் அந்த பங்கு தான், அதே நேரம் அந்த பங்கு நமக்கு வருமானம் செய்து கொடுக்கும் நண்பனும் கூட, ஆகவே நண்பன் மற்றும் எதிரியின் பலம் பலவீனம் நமக்கு முக்கியம், அந்த வகையில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது நமது நண்பன் மற்றும் எதிரியின் எதிரியான HIGH புள்ளியை தான்,
இந்த HIGH புள்ளியை அடித்து நொறுக்கி பலவீனமாக்கி அந்த பங்கு மேலே கடந்தால் என்ன அர்த்தம், அந்த பங்கிற்கு அதிகம் பலம் வந்து விட்டதாக தானே அர்த்தம், ஆகவே அந்த பங்கின் ஒவ்வொரு தினத்தின் HIGH புள்ளியும் நாம் நன்றாக பார்க்க வேண்டிய முக்கியமான விஷயமாகும் ஏனெனில் அந்த புள்ளியை அடித்து நொறுக்கி மேலே சென்றால் அடுத்த எதிரியினால் வீழ்த்தப்படும் வரை அந்த பங்கின் பயணம் தொடரும், இப்பொழுது புரிகிறதா HIGH புள்ளி என்றால் எவளவு முக்கியம் என்று,
மேலும் ஒரு முக்கியமான விஷயம் அந்த பங்கு அன்றைய வர்த்தக நேர முடிவில் அந்த HIGH புள்ளியிலோ அல்லது அந்த புள்ளியின் வெகு அருகிலோ முடிவடைந்தால் அந்த HIGH புள்ளி அன்றைய தினத்தின் அந்த பங்கின் பலம் வாய்ந்த எதிரியாக கொள்ளமுடியாது, இதை ஒரு பக்கம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், சரி இங்கு நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் சந்தேகங்களை பின்னூட்டம் மூலம் கேளுங்கள், சந்தேகங்களுடன் தொடர்ந்தாள் குழப்பம் தான் வரும் ஆகவே உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்வது நல்லது,
சரி அடுத்து LOW என்ற புள்ளியை பற்றி பார்ப்போம்
LOW என்ற புள்ளியை பற்றி மேலோட்டமாக சொல்ல வேண்டுமானால் ஒரு பங்கு அன்றைய வர்த்தக தினத்தின் இறுதிவரை எந்த புள்ளி வரை கீழே சென்றது என்பதினை குறிக்கும் குறியீடு ஆகும், இதை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்,
அதாவது LOW புள்ளி என்பது அந்த பங்கின் மிக முக்கியமான நண்பன் என்று சொல்லலாம், இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால் PETROL தீர்ந்து விட்ட வண்டிக்கு எந்த இடத்தில் பெட்ரோல் பங்க் தென்பட்டு பெட்ரோல் கிடைக்கின்றதோ அந்த இடம் தான் அந்த வண்டி மீண்டும் ஓடத்துவங்கும் STARTING POINT, அதுபோல தான் ஒவ்வொரு பங்குக்கும் அன்றைய தினத்தின் LOW புள்ளி STARTING POINT ஆகும், அங்கிருந்து உயர ஆரம்பித்து விடும் அப்படியானால் அந்த LOW புள்ளி எவளவு முக்கியமானது ?
பெட்ரோல் இல்லாமல் தவித்து ஒரு 10 கிலோ மீட்டர் நீங்கள் வண்டியை தள்ளிக்கொண்டு வந்ததாக எண்ணிக்கொள்ளுங்கள் அப்படி இருக்கும் உங்களுக்கு ஒரு இடத்தில் பெட்ரோல் கிடைத்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும், அது போல தான் ஒவ்வொரு பங்குக்கும் அன்றைய தினத்தின் LOW புள்ளி, அதே நேரம் வர்த்தக நேரத்தின் முடிவில் அந்த பங்கு அந்த LOW புள்ளிகளிலோ அல்லது அந்த புள்ளியின் அருகிலோ முடிவடைந்தால், அது பெட்ரோலே இல்லாத பெட்ரோல் பங்கை கண்டு பிடித்தது போல சக்தி மிக்கதாக இருக்காது இருந்தாலும் பெட்ரோல் பங்க பெட்ரோல் பங்க தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை, அதாவது அன்றைய தினத்தின் LOW புள்ளி LOW புள்ளி தான், புரிகிறதா !
சரி CLOSE புள்ளியை பற்றி அடுததவாரம் பார்ப்போம், இதுவரை உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள் இருந்தால் தயக்கம் இன்றி கேளுங்கள்

0 comments:

""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா

MEMBERS

Kokilam Teacher Farewell Day, Kavalkinaru

http://www.youtube.com/watch?v=LH80Q35Ykrw&feature=colike

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP