1

உங்கள் பென் டிரைவ்க்கு Start Menu

நண்பர்களே,
தற்போது பென் டிரைவ் ஏறக்குறைய கணிணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.CD,DVD யை விட பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் பெரும்பாலும் கோப்புகளை எடுத்துச்செல்ல பயன்படுத்தபடுகிறது.64 GB அளவு பென் டிரைவ் கூட வந்துவிட்டது.

பென் டிரைவ்வை கையாள உதவும் ஒரு Softபொருள் பற்றி இங்கு பார்ப்போம். Windowsல் start menu அனைவரும் அறிந்துருப்போம். அது போல் நமது பென் டிரைவ்க்கு Start Menu போல் மெனு தருகிறது இந்த Softபொருள்.

இந்த மென்பொருளை நிறுவும் பொது உங்கள் பென் டிரைவ்ல் நிறுவி கொள்க.கீழே உள்ள புகைப்படத்தை பெரிதாக்கி பார்க்க படத்தில் உள்ளது போல் பென் டிரைவ்ல் நிறுவி கொள்க.


பின் பென் டிரைவ்ல் நிறுவி உள்ள psmenu.exe என்ற கோப்பை இயக்குக.முதன்முதலில் இயக்கும் போது கீழ்க்கண்ட செய்தி வரும் அதில் create AUTORUN file என்பதை தேர்வு செய்து கொள்க.இதன் மூலம் உங்கள் பென் டிரைவ்வை கணிணியில் இணைத்தவுடன் இயங்க தொடங்கி விடும்.


இந்த மென்பொருள் இயங்க தொடங்கிய பின் Tray யில் ஸ்டார்ட் மெனு போல் வந்து விடும் அதில் Settings தேர்வு செய்து கீழே உள்ளது போல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கோப்புகள்,Applications ஆகியவற்றை இணைத்து கொள்ளலாம்.


பென் டிரைவ்க்காண Start Menu கீழே உள்ளது போல் தோன்றும் .இதன் மூலம் உங்கள் பென் டிரைவ்வை எளிதாக பயன்படுத்தலாம்.



மெனுவில் உள்ள Close all running applications கிளிக் செய்வதன் மூலம் பென் டிரைவ்வை எளிதாக நீக்கலாம்.


இந்த Softபொருளை டவுன்லோட் செய்ய
சுட்டி




அன்புடன்
விக்கி

0 comments:

""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா

MEMBERS

Kokilam Teacher Farewell Day, Kavalkinaru

http://www.youtube.com/watch?v=LH80Q35Ykrw&feature=colike

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP