1

காவல்கிணறு சரித்திர அலைகள்


சேர, சோழ , பாண்டியர் என்ற மூவேந்தர் தமிழகத்தை ஆண்ட காலத்திலேயே சேர
நாட்டின் கிழக்கெல்லையாகவும், மொழிவாரி ராஜ்யங்கள் உருவானபோது கேரள
மாநிலத்தின் கடைசி எல்லையாகவும், பின்னர் நாஞ்சில் நாடு தமிழகத்தில்
இணைந்த போது குமரி மாவட்டத்தின் கிழக்கெல்லையாகவும், திகழ்ந்து வருவது
நமது காவல்கிணறு ஆகும்.
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்டு வந்த நாயக்கர் இனத்து
ராணியான ராணி மங்கம்மாள் பெண்னரசியாக இருந்தாலும்  நாட்டு
நிர்வாகத்தை திறம்பட நடத்தி வந்தாள். அவளது ஆட்சி காலத்தில்
மதுரையிலிருந்த்து முப்பந்தல் வழியாக திருச்செந்தூர் செல்ல சாலைகள்
அமைத்து இருபுறத்திலும் ஆல மரங்கள் நிழலுக்காக நட்டு வைத்தார். இன்றளவும்
அச்சாலையானது அவரது பெயராலே மங்கம்மாள் சாலை என அழைக்கபடுகிறது.
திருசெந்துருக்கு யாத்திரை செல்லும் பயணிகள் தாகம் தீர்த்திட ஊர் பெரிய
கிணற்றையும் வெட்டிவைத்தார்.பயணிகளை துன்புருத்திய கொள்ளையர்களை அடக்கிட
தனது படை வீரர்களையும் காவலுக்கு அமர்த்தினார் கிணற்றிற்கு அருகே படை
வீரர்கள் காவல் இருந்ததால் நாளடைவில் காவல் கிணறு என அழைக்கப்பட்டதாக
பெரியவர்கள் சொல்வார்கள்.
ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கும் முற்பட்டதானது நம் காவல் கிணறு. மேற்கு
தொடர்ச்சி மலையான மகேந்திரகிரியின் அடிவாரத்தில் பனைமரங்களும், வேம்பு,
புளி, போன்ற மரங்கள் ஏராளமாக உள்ளன. அந்நாட்களில் உவரியில் இருந்தது
குடிபெயர்ந்து வந்த [சாமி குட்டி நாடார் என்றவர் வாழ்ந்ததிற்கான
ஆதாரங்கள் இருகின்றன] இந்து நாடார்களே பெருமளவில் விவசாயம் செய்து
வாழ்ந்து வந்தனர். அருகில் இருந்த வடக்கன் குளத்தில் கத்தோலிக்க
திருச்சபையால் ஆலய வழிபாடுகள் ஆரம்பிக்கவே அதை கண்ணுற்ற காவல்கிணறு
மக்களில் ஒருசிலரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாய் மாற ஆரம்பித்தனர்.
நாளுக்கு நாள் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை பெருகவே உள்ளூரில் ஆலயம்
ஓன்று இல்லாத காரணத்தினால் மூன்று மைல்கள் கால்நடையாக வடக்கன்குளம்
சென்று திருப்பலி காணவும், தேவ திரவிய அனுமானங்கள் பெறுவதும் சிரமமாக
இருந்ததால் உள்ளூரிலேயே ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம்
அவர்களிடையே உருவாயிற்று...........................................தொடரும் காவல்கிணறு சரித்திர அலைகள் 

""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா

MEMBERS

Kokilam Teacher Farewell Day, Kavalkinaru

http://www.youtube.com/watch?v=LH80Q35Ykrw&feature=colike

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP