சண்டைக்காரன்

சண்டைக்காரன்
மிக கோபமானவன்
என சொல்லப்பட்ட
ஒரு சண்டைக்காரனை
தெரியும் எனக்கு
சிலர் அவனை
முரடன் என்றார்கள்
பலர் மூர்க்கன்
என்றார்கள்
சண்டைக்காக
தினமும் காத்திருப்பான்
என்றார்கள்
அவனைத்தேடி
சண்டைகள்
வருமோ என்றார்கள்
கணக்கு வைத்து
கொள்வான் என்றும்
சண்டைக்கென
காத்திருப்பானென
சொல்லப்பட்டான்
அவன்
பழகியவர்களுடன்
சண்டைபோட்டதால்
எதிரியானான் அவன்
பழகியவர்கள் அவன்
எதிரியுடன் சேர்ந்து
சண்டைக்காரனை
வம்புக்கு இழுத்தார்கள்
சண்டைக்காரன்
சொன்னான்
உன் புதிய
நண்பனிடம் கேட்டுப்பார்
நான் கொடுத்ததை
சொல்லுவான் என
ஒரு நாள் சண்டைக்காரன்
அமைதியானான்
சண்டை இப்போது
யாரிடம் இருக்கென
தேடிப்பார்த்தேன்
அது பத்திரமாக
இருக்கிறது
அவனின் பழைய
நண்பர்களிடம்










CLICK HERE
0 comments:
Post a Comment