1

பங்குச் சந்தை பயில்வோம்-7

"ஒரு பங்கு நன்றாக உயர்ந்து மேலே தாக்கு பிடிக்க முடியாமல் OPEN விலைக்கும் கீழே வந்து CLOSE ஆனால் என்ன நடக்கும் என்று நீங்கள் யோசித்து பாருங்கள், மேலும் நீங்கள் யோசித்தது போல அடுத்த நாள் நடக்கின்றதா இல்லை மாறுபாடுகள் வருகிறதா என்று பாருங்கள்.." என்று சொல்லி இருந்தேன்,

உங்களின் அனுபவம் எப்படி இருந்தது, இந்த அனுபவத்தின் மூலம் உங்களின் யோசனைக்கு தகுந்தார்ப்போல் சரியான முடிவு வரவில்லை என்றாலும் முயற்ச்சி செய்துகொண்டே இருங்கள் போக போக இந்த செயல் உங்களுக்கு சரியான பயிற்சியை தரும், பயிற்ச்சி மட்டுமே நேர்த்தியாக
TECHNICAL ANALYSING கற்றுக்கொள்வதற்கு உதவும், சரி இந்த வாரம் மேலும் சில விசயங்களை பற்றி பார்ப்போம் அதாவது TECHNICAL ANALYSING செய்வதற்கு நாம் வரைபடங்களை தான் பயன்படுத்துவோம், அதாவது ஒரு பங்கின் நகர்வுகளை தெரிந்து கொள்ளவோ அல்லது தீர்மானிக்கவோ நாம் அந்த பங்கை பற்றி அடி முதல் முடி வரை ஆராய்ந்து பார்க்க வேண்டும், அப்படி பார்த்தால் தான் அந்த பங்கை பற்றி நாம் ஒரு அனுமானத்திற்கு வரமுடியும்,
சரி ஒரு பங்கை பற்றி எப்படி அடி முதல் முடி வரை தெரிந்துகொள்வது, இப்படி ஒவ்வொரு பங்கை பற்றியும் பார்த்துக்கொண்டே இருந்தால் எப்படி வர்த்தகம் செய்வது அதோட அந்த பங்கை பற்றி எப்படி என்னவென்று பார்ப்பது, தினமும் இவர் சொல்வது போல அந்த குறிப்பிட்ட பங்கின் OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்துக்கொண்டு எப்படி பார்ப்பது, வெறும் நம்பரை வைத்துக்கொண்டு என்னய்யா செய்வது, இது என்ன ஆகாத வேலையாய் இருக்கே என்று எண்ணுகிறீர்களா,
அப்படி எண்ணாதீர்கள், நாம் இந்த OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளியின் மூலம் தான் அந்த பங்கை பற்றி ஆராயப்போகிறோம், ஆனால் நீங்கள் நினைப்பது போல வெறும் நம்பர்களை வைத்துக்கொண்டு அல்ல, அந்த நம்பர்களை நமக்கு தகுந்தார்ப்போல் சில உருவங்கள் கொடுத்து மாற்றியமைத்து தான் ஆராயப்போகிறோம் ஆகவே நண்பர்களே கவலை கொள்ளாதீர்கள்….
சரி இந்த OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்துக்கொண்டு உருவ அமைப்புகளை நாமே உருவாக்கி கொண்டிருக்க முடியாது, இதற்க்கென்று தனியாக சில SOFTWARE உள்ளது அவைகளை நாம் வாங்கி பயன்படுத்திக்கொண்டால் போதும், மேலும் ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு சொல்ல வேண்டும் அதாவது இதற்காக அநேக SOFTWARE கள் உள்ளது இதில் நான் பயன்படுத்துவது METASTOCK எனப்படும் SOFTWARE ஐ தான்,
சரி SOFTWARE உங்களிடம் உள்ளது என்று வைத்துக்கொண்டால் அதன் மூலம் நாம் ஆராய வேண்டிய ஒவ்வொரு பங்குகளின் OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகள் (DATA FOR SOFTWARE) நமக்கு தேவை இல்லையா, அதனை பற்றியும் சொல்லி விடுகிறேன், பங்கு சந்தை இந்தியாவில் தொடங்கிய அன்று முதல் இன்று வரை பங்குகளின் இந்த மேற்கண்ட புள்ளிகளை நாம் சில வர்த்தகர்களிடம் இருந்து பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்,
அவர்களுக்கு DATA VENDOR என்று பெயர், இவர்களின் வலை தளத்தில் இருந்து நாம் தினமும் மாலை சந்தை முடிந்த பின்பு அனைத்து பங்குகள் மற்றும் மேலும் சில முக்கியமான குறியீடுகளின் அன்றைய தின OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை பெற்று (DOWNLOAD) அதை நாம் வைத்து இருக்கும் SOFTWARE மூலம் OPEN செய்து பார்த்தால் நமக்கு தேவையான உருவங்கள் கிடைக்கும், இந்த உருவ அமைப்புகளை வைத்துக்கொண்டு தான் நாம் அந்த குறிப்பிட்ட பங்கின் அடுத்தக்கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை ஆராயப்போகிறோம், சரி அதற்க்கு முன் வேறு சில முக்கியமான விஷயத்தை பற்றியும் பார்த்து விடுவோம்
அதாவது உருவ அமைப்புகள் உருவ அமைப்புகள் என்று சொல்லி வருகிறேன் இல்லையா, இந்த உருவ அமைப்புகளை பற்றி சற்று விரிவாக பார்த்து விடுவோம், ஏனெனில் இந்த உருவங்கள் எப்படி வருகிறது, இப்படி, இந்த COLOUR இல் இருந்தால் இதற்க்கு என்ன அர்த்தம், அந்த COLOUR இல் (எந்த எந்த COLOUR என்று பின்னால் சொல்லிக்கொண்டே வருகிறேன் பொறுமையாக படியுங்கள்) இருந்தால் அதற்க்கு என்ன அர்த்தம் என்பது முக்கியம், இதில் தெளிவாக இருந்தால் தான் நமக்கு நல்லது,
அதற்க்கு முன் இந்த CHART இன் மூலம் நமக்கு என்ன தேவை என்பதை பற்றி சொல்லி விடுகிறேன், அதாவது நாம் TECHNICAL ANALYSE செய்ய CHART படம் தேவை என்றும் இந்த CHART படம் அன்றாடம் அனைத்து பங்குகளில் நடக்கும் OPEN, HIGH, LOW CLOSE என்ற புள்ளிகளின் மூலம் தான் உருவாக்கப்படுகிறது என்றும், அப்படி உருவாகும் உருவ அமைப்புகளை வைத்து நாம் ஆராய்ச்சி செய்வோம் என்றும் பார்த்தோம் இல்லையா, அப்படி ஆராய்ச்சி செய்யும் போது சில அடிப்படை விசயங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா,
அதை பற்றி இப்பொழுது பார்ப்போம் அதாவது காசு இருக்கென்று CAR வாங்கி விட்டால் போதுமா ஓட்ட தெரிய வேண்டும் இல்லையா அப்படி ஓட்ட தெரிந்து கொள்ளும் போது எது GEAR, எது BREAK, எது ACCELERATOR, என்று சொல்லி கொடுப்பார்கள் இல்லையா அப்படிதான் (நான் சொல்வது எப்படி வண்டி ஓட்டுவது என்பதை பற்றி அல்ல வண்டியின் பாகங்கள் எது எது என்று சொல்லி வருகிறேன், இது தான் GEAR ROD என்று தெரிந்தால் தானே GEAR போட முடியும், அது இல்லாமல் வெறும் படத்தை மட்டும் காட்டி முதலில் FIRST GEAR போட வேண்டும் பிறகு SECOND GEAR இப்படியே முன்னேறி ஐந்தாவது GEAR வரை போட்டு ஓட்ட வேண்டியது தான் என்று சொல்லி விட்டால் வண்டிக்குள் சென்று GEAR ROD எது வென்று அவர் எப்படி கண்டு பிடிப்பார்,
ஆகவே தான் இந்த வரை பட உருவங்களை பற்றி ஒரு சிறிய விளக்கம் தர வேண்டியது அவசியமாகிறது சரி விசயத்துக்கு வருவோம், நான் உங்களிடம் சொன்னேன் இல்லையா இந்த OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளின் மூலம் தான் உருவங்கள் உருவாக்கப்படுகிறது என்று, அந்த உருவங்கள் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை பார்ப்போம், அதற்க்கு முன் உருவ அமைப்புகளில் சில வகைகள் உள்ளது அந்த வகைகளை பற்றியும் சொல்லி விடுவது தற்பொழுது ஏற்றதாக இருக்கும்,
அதாவது இந்த OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளை வைத்துக்கொண்டு சில கோடுகள் (உருவங்கள் ) உருவாகும் அது போன்ற உருவங்களை மூன்று விதமாக நாம் பார்க்கலாம் அந்த மூன்று வடிவங்களை பற்றி ஒரு சிறிய விளக்கத்தை அதற்கு உண்டான படங்களுடன் பார்ப்போம்
அந்த மூன்று வடிவங்கள் :
BAR CHART,
CANDLESTICKS CHART,
LINE CHART
முதலில் BAR CHART
இந்த BAR CHART என்ற வடிவம் கீழே கொடுத்துள்ள படம் 1 இல் இருப்பது போல் தான் இருக்கும், சரி இந்த படம் நாம் முன்னர் சொன்னது போல OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளில் இருந்து தான் உருவாக்கப்பட்டுள்ளது அப்படி என்றால் இந்த உருவத்துக்குள் தான் அந்த பங்கின் ஒவ்வொரு நாள் OPEN HIGH LOW CLOSE, என்ற புள்ளிகள் புதைந்து இருக்கின்றது என்று தானே அர்த்தம், அப்படி என்றால் இந்த உருவத்தின் மூலம் (படத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு கோட்டின் மூலம் ) நாம் எப்படி அந்த பங்கின் OPEN HIGH LOW CLOSE, என்ற புள்ளிகளை பற்றி தெரிந்து கொள்வது,
சரி போன பதிவில் பார்த்தது போல ஒரு பங்கின் OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளை வைத்து அடுத்த நாள் அந்த பங்கின் நகர்வுகளை ஒரு 50% அளவிற்காவது தெரிந்து கொள்ளவேண்டுமே எப்படி தெரிந்து கொள்வது என்ற எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடுகிறதா அப்படி என்றால் நீங்கள் இப்பொழுதே 25% அளவிற்கு TECHNICAL கற்றுக்கொண்டீர்கள் என்று அர்த்தம், தோன வில்லையா அப்படி என்றால் நீங்கள் 100% TECHNICAL கற்றுக்கொள்ள தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம், சரி இந்த படத்தை பாருங்கள் விளக்கத்தை அடுத்த வாரம் சொகிறேன்- சந்தேகங்களை கேளுங்கள்
BAR CHART PICTURE

0 comments:

""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா

MEMBERS

Kokilam Teacher Farewell Day, Kavalkinaru

http://www.youtube.com/watch?v=LH80Q35Ykrw&feature=colike

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP