1

பங்குச் சந்தை பயில்வோம்-8

கடந்த வாரம் BAR CHART பற்றி பார்த்துக்கொண்டு இருந்தோம் இல்லையா, கடந்த வாரம் கொடுத்த படத்தை பார்த்தீர்களா BAR CHART என்பது அந்த படத்தில் உள்ளது போல் தான் இருக்கும், சரி அந்த படத்தில் தான் ஒரு பங்கின் OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகள் இருப்பதாக பார்த்து வந்தோம் இல்லையா, இப்பொழுது அந்த கோட்டில் எது OPEN புள்ளி எது CLOSE புள்ளி என்று எப்படி கண்டு பிடிப்பது என்று பார்ப்போம் கீழே கொடுத்துள்ள படத்தை பாருங்கள்

இதில் மூன்று BAR கோடுகளை கொடுத்துள்ளேன் அந்த கோட்டில் உங்களின் இடது புறம் இருக்கும் சிறிய கோடு தான் (LEFT HAND SIDE) தான் OPEN புள்ளியை குறிக்கும், அதே போல் உங்களுக்கு வலது புறம் (RIGHT HAND SIDE) இருக்கும் சிறிய படுக்கை வச கோடு CLOSE புள்ளியை குறிக்கும், அந்த கோட்டின்
நுனிப்பகுதி (TOP) HIGH புள்ளியை குறிக்கும், அந்த கோட்டின் அடிப்பகுதி (BOTTOM) LOW புள்ளியை குறிக்கும் இப்படி தான் நாம் அந்த கோட்டை வைத்து அன்றைய தினம் ஒரு பங்கின் OPEN எது மற்றும் HIGH, LOW CLOSE என்ற புள்ளிகள் எவை எவை என்று அறிந்து கொள்ளலாம்,
சரி இப்பொழுது கடந்த ஆறாவது பதிவில் ஒரு பங்கின் OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளை வைத்து அடுத்த நாள் நகர்வை ஒரு 50% அளவிற்காவது அறிந்து கொள்ளலாம் என்று பார்த்தோம் இல்லையா, இப்பொழுது நான் எப்படி இந்த புள்ளிகளை வைத்து அடுத்த நாள் நகர்வை தீர்மானிக்கலாம் என்று ஆறாவது பதிவில் குறிப்பிட்டதை இந்த கோட்டை பயன்படுத்தி முயற்சி செய்யுங்கள், எளிதாக உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும், அதாவது வெறும் நம்பர்களை வைத்துக்கொண்டு அடுத்த நாள் நகர்வை கணிப்பதை விட இது போன்ற ஒரு உருவத்தை வைத்துக்கொண்டு நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்,
மேலும் இந்த படத்தில் மூன்று கோடுகள் கொடுத்துள்ளேன் இந்த மூன்று கோடுகளும் வெவேறு OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளை கொண்டது, ஆகவே இந்த OPEN, CLOSE என்ற புள்ளிகளை குறிக்கும் சிறிய படுக்கை வச கோடுகள் மாறி மாறி இருக்கும் பாருங்கள், முதலில் பார்க்க சற்று கஷ்டமாக இருக்கும் போக போக எளிதாகி விடும், இங்கு நான் மூன்று கோடுகளை பெரிதாக்கி கொடுத்துள்ளேன், கடந்த பதிவில் உள்ள படத்தை இப்பொழுது பாருங்கள், பார்த்து அதில் உள்ள வலது புற இடது புற சிறிய படுக்கை வச கோடுகளை வைத்து ஒவ்வொரு நாளும் எப்படி எல்லாம் அந்த பங்கில் வர்த்தகம் நடந்து இருக்கிறது என்று பயிற்ச்சி செய்யுங்கள்
மேலும் OPEN புள்ளி மற்றும் CLOSE புள்ளி எப்படி எல்லாம் அமைந்து இருக்கின்றது என்றும் பயிற்ச்சி செய்யுங்கள், அநேக கோடுகளுடன் இருக்கும் இங்குள்ள படத்தில் (கடந்த வார படத்தை சொல்கிறேன்) ஒவ்வொரு கோடும் ஒரு நாளைய அந்த குறிப்பிட்ட பங்கின் நகர்வுகளை சொல்லும் கோடு, இப்படி ஒவ்வொரு நாளும் உள்ள கோட்டினை வைத்து அந்த பங்கின் மொத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை வேறு சில உத்திகளை பயன்படுத்தி நாம் அறியலாம், அது போல நாம் கண்டு பிடிப்பதை தான் அல்லது ஆராய்வதை தான் TECHNICAL ANALYSING என்று சொல்கிறோம், நீங்கள் ஒவ்வொருவரும் இன்னும் சில தினங்களில் TECHNICAL ANALYSTS ஆகப்போகிறவர்கள் தானே அதற்க்கு இப்பொழுதே எனது வாழ்த்துக்கள்,
சரி அடுத்த வடிவத்தை பற்றி பார்ப்போம் அதாவது CANDLESTICK கீழே கொடுத்துள்ள படத்தை பாருங்கள் நீங்கள் முன்னர் பார்த்த BAR CHART படத்திற்கும் இந்த படத்திற்கும் அநேக வித்தியாசங்கள் இருக்கும் பாருங்கள் இந்த CANDLESTICK படத்தில் உள்ள ஒவ்வொரு கோடுகளையும் பாருங்கள் முன்னர் பார்த்த BAR CHART படத்தில் OPEN இடது பக்கத்திலும் (LEFT SIDE), CLOSE வலது பக்கத்திலும் (RIGHT SIDE) இருந்தது இல்லையா, இதில் பாருங்கள் சற்று வித்தியாசமாக புரிந்து கொள்வதற்கு எளிதாகவும் இருக்கும்
அதாவது இந்த CANDLESTICK CHART நாம் வர்ணங்களை (CLOLUR, கலர் ) பயன்படுத்தி தான் பார்க்க வேண்டும், அப்படி பார்த்தால் மிக எளிதாக அந்த பங்கின் அன்றைய தின OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளை பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம், அதாவது இதில் இரண்டு வித வண்ணங்கள் இருக்கும் அதாவது பச்சை மற்றும் சிகப்பு,
பச்சை நிறம் ஒரு குறிப்பிட்ட CANDLE இல் இருந்தால் அன்றைய தினம் அந்த பங்கு உயர்ந்து இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம், அதே போல் சிகப்பு நிறத்த்தில் இருந்தால் அன்றைய தினம் அந்த பங்கு வீழ்ச்சியை கண்டுள்ளது என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம், சரி இந்த உயர்வு மற்றும் வீழ்ச்சி என்பதை எப்படி கண்டு பிடிப்பது என்று பார்த்து விடுவோம்,
அதாவது ஒரு பங்கு அன்றைய தினம் எந்த புள்ளியில் வர்த்தகத்தை தொடங்கியதோ அந்த புள்ளிக்கும் மேலே அன்றைய தினத்தில் அந்த பங்கு முடிவடைந்தால் அன்றைய தினம் அந்த பங்கு உயர்ந்து முடிந்துள்ளது என்று அர்த்தம் கொள்ள வேண்டும் அப்படி முடிவடைந்தால் அன்றைய தின CANDLESTICK கோடு பச்சை நிறத்தில் இருக்கும்,
அதே போல் அந்த பங்கு வர்த்தகத்தை தொடங்கிய புள்ளியை விட கீழே முடிவடைந்தால் அந்த பங்கு அன்றைய தின வர்த்தகத்தை இறக்கத்துடன் (வீழ்ச்சியுடன்) நடத்தி உள்ளது என்று அர்த்தம் கொள்ள வேண்டும், அப்படி இருந்தால் அன்றைய தின CANDLESTICK கோடு சிகப்பு நிறத்தில் இருக்கும், இந்த பச்சை மற்றும் சிகப்பு நிறங்களிலும் இரண்டு வித்தியாசங்கள் இருக்கும், அதையும் பற்றியும் சொல்லி விடுகிறேன்
அதாவது இந்த நிறங்களை பற்றி ஆங்கிலத்தில் சொன்னால் இன்னும் வசதியாக இருக்கும் அதாவது பச்சை நிறம் இந்த CANDLESTICK CHART படத்தில் இரு விதத்தில் இருக்கும் அதாவது EMPTY GREEN என்று ஒரு நிறத்திலும் SOLID GREEN என்று மற்றுமொறு நிறத்திலும் இருக்கும் இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றும் பார்த்து விடுவோம்,
அதாவது ஒரு CANDLESTICK கோட்டில் பச்சை நிறம் இருந்தால் அன்றைய தினம் அந்த பங்கு உயர்ந்து இருக்கிறது என்றும் சிகப்பு நிறத்தில் இருந்தால் அன்றைய தினம் அந்த பங்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது என்று பார்த்தோம் இல்லையா அதே நேரம் இந்த பச்சை நிறத்திலும் சிகப்பு நிறத்திலும் இரண்டு வேறுபாடுகள் இருக்கும் அதாவது பச்சை நிறத்தை பொறுத்தவரை EMPTY GREEN என்று ஒரு நிறத்திலும், SOLID GREEN என்று ஒரு நிறத்திலும் இருக்கும் அதே போல், சிகப்பு நிறத்தில் EMPTY RED, SOLID RED என்று இரண்டு வேறுபாடுகள் இருக்கும் அவறறை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்
அதற்க்கு முன் கீழே கொடுத்துள்ள படத்தை பாருங்கள் முதல் படம் BAR CHART இல் OPEN மற்றும் CLOSE என்ற புள்ளிகள் எப்படி அமைந்து இருக்கும் என்பதை விளக்கும் படம் இரண்டாவது படம் CANDLESTICK CHART எப்படி இருக்கும் என்பதை விளக்கும் படம், இரண்டையும் பாருங்கள் மேலும் இந்த BAR CHART ஐ பார்த்து விட்டு இதற்க்கு முன் உள்ள பதிவில் வெளியிட்ட படத்தையும் ஒரு முறை பார்த்து பயிற்ச்சி செய்யுங்கள்
BAR CHART PICTURE





0 comments:

""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா

MEMBERS

Kokilam Teacher Farewell Day, Kavalkinaru

http://www.youtube.com/watch?v=LH80Q35Ykrw&feature=colike

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP